கந்தரலங்காரம்-30
பால் என்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்
தண்டைக்
கால் என்கிலை மனமே யெங்ஙனே முத்தி காண்பதுவே.
(பால் போன்ற மொழி என்றும், பஞ்சு போன்ற பதம் (பாதம்)
என்றும், பாவையர் கண்கள் சேல் என்னும் கெண்டைமீன்கள் என்றும்
சொல்லிக் கொண்டு திரிகிற நீ, செந்தில்வேலன் கையில் இருக்கிற
வேலைச் சொல்ல மாட்டேன் என்கிறாய், வெற்றியுடைய மயூரம்
என்னும் மயிலைச் சொல்ல மாட்டேன் என்கிறாய், வெட்சி தண்டை
அணிந்த கால் என்று சொல்ல மாட்டேன் என்கிறாய்; இப்படி
இருக்கும் மனமே, நீ எங்ஙனம் முக்தி அடைவாய்?) அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 30.
பாலென்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையர்கண்
சேலென்பதாகத்திரிகின்ற நீசெந்திலோன்றிருக்கை
வேலென்கிலை கொற்றமயூரமென்கிலை வெட்சித்தண்டைக்
காலென்கிலைமனமே யெங்ஙனேமுத்தி காண்பதுவே.
(கந்தரலங்காரம்-30)
No comments:
Post a Comment