பாஞ்சால நாடு;
இதன் தலைநகரம் காம்பில்லிய நகரம்; விருஷதன்
என்ற மன்னர் ஆண்டு வந்தார்; அவரின் புதல்வன் துருபதன்;
கல்வி கற்பதற்காக குருகுலவாசத்துக்கு போகிறான்;
பரத்துவாச முனிவரின் புத்திரன் துரோணர்; பரத்துவாசர் தவத்தில் இருக்கிறார்;
அதைக் கெடுக்க இந்திரன் திட்டமிட்டு, மேனகை
என்னும் தேவலோகப் பெண்ணை அங்கு அனுப்புகிறான்; அவளைப்
பார்த்த பரத்துவாச முனிவர், அவளுடன் கூடி பெற்ற புத்திரனே
இந்த துரோணர்;
இந்த துரோணரும்,
பாஞ்சால நாட்டு இளவரசன் துருபதனும் ஒன்றாகப் படிக்கிறார்கள்;
நட்புடன் இருக்கிறார்கள்; துரோணருக்கு எப்போது
வேண்டுமானாலும் உதவி செய்வதாக இளவரசன் துருபதன் சொல்லிகிறான்; குருகுலவாசம் முடிந்து பிரிகிறார்கள்;
துருபதன்,
பாஞ்சால நாட்டு அரசனாக பதவி ஏற்கிறான்: ஒருநாள், தன் குருகுல நண்பனான துரோணர் வருகிறார்: ஆனால், மன்னர்
துருபதன், நண்பன் துரோணரை யார் என்றே தெரியாது என்று அவமானம்
செய்துவிடுகிறான்; உதவி கேட்டு வந்த துரோணருக்கு தீராத கோபம்;
துரோணர்,
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஆசிரியர்
ஆகிறார்; அங்கு அர்ச்சுனனின் வில்வித்தையை கண்டு
பிரமிக்கிறார்; அவனிடம், தன்
குருதட்சனையாக, தன் எதிரியும் பாஞ்சால நாட்டு மன்னனுமான
துருபதனை கட்டி இழுத்துவரும்படி கேட்டுக்
கொள்கிறார்; அர்ச்சுனனும் அவ்வாறே துருபத மன்னனுடன் போரிட்டு,
அவனைத் தோற்கடித்து, அவனைக் கட்டி இழுத்து
வந்து, தன் குரு துரோணரிடம் நிறுத்துகிறான்;
துரோணர்,
"துருபதா! நீ இப்போது மன்னன் இல்லை; என்
அடிமை; உன் பாஞ்சால நாடு முழுவதும் இனி எனக்குச் சொந்தம்;
இருந்தாலும், நீ என் நண்பன் ஆனதால், என் பாஞ்சால நாட்டின் பாதியை உனக்குத் தானமாகத் தருகிறேன்; இப்போது நீ எனக்கு சமமாகி விட்டாய்; போ!" என்று
அவன் முன்னர் அவமானம் செய்த தவறைச் சுட்டிக் காட்டினார்: இது துருபதனுக்கு மிகுந்த
அவமானம் ஆகிவிட்டது:
துருபதன்,
நாடு திரும்பி, ஒரு பெரிய யாகத்தை
வளர்க்கிறான்; அதில், என் எதிரி
துரோணரை ஒழித்துக் கொல்வதற்கு தனக்கு வாரிசு வேண்டும் என்று கேட்கிறான்: அந்த
யாகத்தில் தோன்றியவர்களே, திருஷ்டத்துய்மன், சிகண்டி என்ற
இரண்டு மகன்களும், திரௌபதி என்ற மகளும்; இந்த திரௌபதியே,
அர்ச்சுனனை மணக்கிறாள்; இந்த சிகண்டிதான்,
முதலில் ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறி, மகாபாரத யுத்தத்தில் பீஷ்மரைக் கொன்றாள்;
பீஷ்மர் பெண்ணுடன் சண்டையிட மாட்டேன் என்று மறுத்தபோது, அவரைக் கொன்றாள் இந்த
சிகண்டி;
**
No comments:
Post a Comment