Saturday, April 23, 2016

துர்க்கை


திரிலோகத்திலும் பயங்கரனாய் ஒரு அசுரன் திரிகிறான்; அவன் பெயர் துர்காசுரன்; அவன் இந்திரன் முதலான தேவர்களை எல்லாம் பதவிகளை இழந்து ஓடி ஒழியும்படி அட்டகாசம் செய்கிறான்; பயந்தபோன தேவர்கள் எல்லோரும் கூடி, சிவனிடம் முறையிடுகின்றனர்; அவர் தன் பக்கத்தில் அமர்ந்துள்ள பார்வதியைப் பார்க்கிறார்; பார்வதி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, தானே அந்த துர்காசுரனை அழிப்பதாகச் சொல்லி, காலராத்திரி என்னும் ஒரு பாங்கியை ஏவி விடுகிறார்; காலராத்திரி அவனைப் பார்த்து பயந்து திரும்பிவிடுகிறாள்;

எனவே பார்வதி தேவியே நேரில் செல்கிறார்: அவன் ஒரு பெரிய யானையாகி எதிர்க்கிறான்; தேவி அந்த யானையை தன் நகரங்களால் கிழித்து எறிகிறார்; ஆனால் அசுரன் மகிஷம் ஆகி எதிர்க்கிறான்; தேவி அதையும் கொல்கிறார்; பின்னர் அந்த அசுரன் தன் பழைய அசுர உருவில் எதிர்க்கிறான்; தேவி அவனை தன் கணையை விட்டு அவன் உடலை பிய்த்து எறிகிறார்;

துர்க்கனைக் கொல்ல பார்வதி தேவி எடுத்த உருவமே துர்கா; இவர் எட்டு தோள்களுடனும், பத்து கைகளுடனும் (அல்லது பதினெட்டு கைகளுடனும்), சூலம், வாள், சக்கரம், கரகம் முதலிய ஆயுதங்களை தாங்கி நிற்பவர் என்றும் சொல்வர்; போர்த் தொழிலுக்கு அதிதேவதை இவராம்; இவரே காளிதேவி என்றும் கூறுவர்;



No comments:

Post a Comment