Friday, April 15, 2016

அமிர்த மதனம்

அமிர்த மதனம்

இந்த பிரபஞ்சம் உருவான விதத்தைத்தான் அமிர்த மதனம் என்பர்;

அமிர்த மதனம் என்றால் அமிர்தம் கடைதல் என்று பொருளாம்; தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து இந்த அமிர்தம் கடைதல் நிகழ்வை நடத்தினராம்; இது கிருத யுகத்தில் நடந்ததாம்; திருப்பாற்கடலைக் கடைந்தார்களாம்; அதைக் கடைவதற்கு மந்தர மலையை மத்தாக உபயோகித்தனராம்; வாசுகி என்னும் பாம்பை, மத்தைச் சுற்றும் கயிறாக பயன்படுத்தினராம்;

அவ்வாறு திருப்பாற்கடலைக் கடைந்தபோது, கீழ்கண்ட பொருள்கள் கிடைத்ததாம்;

விஷம் = கொடிய உஷ்ணம்;
லட்சுமி = இளமை, அழகு;
சந்திரன் = அப்ஜன்;
தந்வந்திரி
உச்சை சிரவம்   குதிரை வடிவம்;
கவுஸ்துபம் = சூரியன்;
பாரிஜாதம்,
ஐராவதம் = யானை வடிவம்;
கற்பகத்தரு,
காமதேனு,
அமிர்தம்.

இந்த பிரபஞ்சச் சுற்றலில் (கடைதலில்) மேற்சொன்ன பொருள்களே முதலில் தோன்றின. திருப்பாற்கடல் என்பது ஆகாயம் என்னும் இந்த பிரமாண்டம்; இது முதலில் ஆகாய உருவமாய் இருந்து, பின்னர் வாயு உருவமாகி, பின்னர் அக்கினி உருவமாகி, அதன்பின்னரே இந்த தோற்றம் கொண்ட பிரபஞ்சம் உருவானதாம்;

கிருத யுகம் என்பது இந்த பிரபஞ்சம் உருவானபோது உருவான யுகம் ஆகும்.

**

No comments:

Post a Comment