Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-51

(சர்வ சிருஷ்டி)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமி இசையானாய்
புவனம் படைப்பான் அப் புண்ணியன் தானே!

புவனம் படைப்பா னொருவ னொருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திர ரைவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-51)

அகத்திய மூலம் திருமந்திரம்-50

(சர்வ சிருஷ்டி)

மானின் கண் வானாகி வாரி வளந்தனில்
கானின் கணீரும் கலந்து கடினமாகய்த்
தேனின் கணைந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கணின்று பொருந்தும் புவனமே!

மானின்கண் வானாகி வாரி வளந்தனிற்
கானின்க ணீருங் கலந்து கடினமாய்த்
தேனின்க ணைந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்க ணின்று பொருந்தும் புவனமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-50)

அகத்திய மூலம் திருமந்திரம்-49

(சர்வ சிருஷ்டி)

தூரத்தில் சோதி துடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாத அனைந்து ஒரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும்
ஆர்வத்துச் சத்தி ஓர் ஆவத்தும் ஆனுமே!

தூரத்திற் சோதி துடர்த்தொரு சத்தியா
யார்வத்து நாத மனைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முத லைந்துக்கு
மார்வத்துச் சத்தியோ ராவத்து மானுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-49)


அகத்திய மூலம் திருமந்திரம்-48

(சர்வ சிருஷ்டி)

இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள்ளிருந்திடும்
வல் அதுவாக வழி செய்த அப் பொருள்
சொல் அது சொல்லிடில் தூராதி தூரமே!

இல்லது சத்தி யிடந்தனிலுண் டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது வாக வழிசெய்த வப்பொருள்
சொல்லது சொல்லிடிற் றூராதி தூரமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-48)

அகத்திய மூலம் திருமந்திரம்-47

(சர்வ சிருஷ்டி)

நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீதற்று அகம் வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்து எழும் விந்துவே!

நாதத்தில் விந்துவு நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி யென்னவே
பேதித்து ஞானங் கிரியைபி றத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-47)

அகத்திய மூலம் திருமந்திரம்-46

(சர்வ சிருஷ்டி)

ஆதியோடு அந்தம் இலாத பாரபரம்
போதமதாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை அதன்பால் திகழ் நாதமே!

ஆதியொ டந்த மிலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதிய தனிற்பரந் தோன்றத் தோன்றுமாந்
தீதில்ப ரையதன் பாற்ற்றிகழ் நாதமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-46)


அகத்திய மூலம் திருமந்திரம்-45

(அடிமுடி தேடல்)

ஊழி வலம் செய்த அங்கோர் ஒருவற்கு
வாழிச் சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலை நீர் விதித்து இது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே!

ஊழி வலஞ்செய்தங் கோரு மொருவற்கு
வாழிச் சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்திது தாவென
வூழிக் கதிரோ னொளியைவென் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-45).


அகத்திய மூலம் திருமந்திரம்-44

(அடிமுடி தேடல்)

வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகில
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சார் அகிலாரே!

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்க
ளாள்கொடுத் தெம்போ லரனை யறிகில
ராள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-44)

அகத்திய மூலம் திருமந்திரம்-43

(அடிமுடி தேடல்)

ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்ததோர் மெய்ந் நெறி முன் கண்
பால் இங்ஙனம் செய்து உலகம் வலம் வரும்
கோல் இங்கனம் அஞ்ச அருள் கூடலும் ஆமே!

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்
பாலிங் ஙனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங்க னமஞ்சருள் கூடலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-43)

அகத்திய மூலம் திருமந்திரம்-42

(அடிமுடி தேடல்)

கானக் கமலத்து இருந்து சதுமுகன்
தானக் கருங்கடல் ஊழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையதாமே!

கானக் கமலத் திருந்து சதுமுகன்
றானக் கருங்கட லூழித் தலைவனு
மூனத்தி னுள்ளே யுயிர்போ லுணர்கின்ற
தானப் பெரும்பொருட் டன்மைய தாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-42)

அகத்திய மூலம் திருமந்திரம்-41

(அடிமுடி தேடல்)

சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தா என்றான் முனிவரும்
பா அடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப்பு எய்தும் வாறே!

சேவடி யேத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானு முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத்  தலைப்பெய்தும் வாறே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-41).

அகத்திய மூலம் திருமந்திரம்-40

(அடிமுடி தேடல்)

நின்றான் நிலம் முழுதும் அண்டத்து நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினராய்ந்தது
சென்றா இருவர் திருமுடி மேல் செல
நன்றாம் கழலடி நாட ஒண்ணாதே!

நின்றா னிலமுழு தண்டத்து ணீளிய
னன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றா ரிருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-40)

அகத்திய மூலம் திருமந்திரம்-39

(அடிமுடி தேடல்)

ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணா வரனோங்கும் திருவுருவே அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதியும் கடந்த
தாண் முழும் தண்டமும் ஆகி நின்றானே!

ஊனா யுயிரா யுணர்வங்கி யாய்முன்னஞ்
சேணா வரனேங்குந் திருவுரு வேயண்டத்
தாணுவு ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழுந் தண்டமு மாகிநின் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-39)

அகத்திய மூலம் திருமந்திரம்-38

(அடிமுடி தேடல்)

ஆம் ஏழு உலகுற நின்ற எம் மண்ணலும்
தாம் ஏழு உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழு உலகு உறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவன் ஆண்மையினாலே!

ஆமே ழுலகுற நின்றவெம் மண்ணுலந்
தாமே ழுலகிற் றழற்பிழம் பாய் நிற்கும்
வானே ழுலகுறு மாமணிக் கண்டனை
நானே யறிந்தே னவனாண்மையி னாலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-38)

அகத்திய மூலம் திருமந்திரம்-37

 (அடிமுடி தேடல்)

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மாறங் கடம் பேதமையாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
வரன் அடி தேடி அரற்றுகின்றாரே!

பிரமனு மாலும் பிரானேநா னென்னப்
பிரமன்மா றங்கடம் பேதமை யாலே
பரம னனலாய்ப் பரந்துமுன் னிற்க
வரனடி தேடி யரற்றுகின் றாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-37)


Wednesday, March 30, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-36

(எலும்பும் கபாலமும்)

எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்தியன் ஆகி
எலும்பும் கபாலுமும் இற்று மண்ணாமே!

எலும்புங் கபாலமு மேந்தி யெழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
யெலும்புங் கபாலமு மேந்தில னாகி
லெலும்புங் கபாலமு மிற்றுமண் ணாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-36).