கந்தரலங்காரம்-41
பாலே அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றி என்றும்
மாலே கொண்டு உய்யும் வகை அறியேன் மலர்த்தாள்
தருவாய்
காலே மிகவுண்டு காலே இலாத கணபணத்தின்
மேலே துயில் கொள்ளும் மாலோன் மருக செவ்வேலவனே.
(பால் போன்ற மொழிபேசும் பெண்களின் இன்பத்தை
விரும்பி எப்போதும் மயக்கம் கொண்டு, தப்பிக்கும் வழி அறியாமல் இருக்கிறேன்; உன் மலர் போன்ற பாதத்தை தருவாய்; கால் என்னும்
காற்றை மிக உண்டு, காலே இல்லாத கணபணம் என்னும் பாம்பின் மேலே
துயில் கொள்ளும் மாலோன் என்னும் திருமாலின் மருமகனே! செவ்வேலவனே!)
பாலேயனைய மொழியார்தமின்பத்தைப் பற்றியென்று
மாலேகொண்டுய்யும் வகையறியேன் மலர்த்தாடருவாய்
காலேமிகவுண்டு காலேயிலாதகணபணத்தின்
மேலேதுயில் கொள்ளுமாலோன் மருக செவ்வேலவனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் பாடல்-41).
No comments:
Post a Comment