Saturday, March 5, 2016

கந்தரலங்காரம்-84


கந்தரலங்காரம்-84

மைவரும் கண்டத்தர் மைந்த கந்தா என்று வாழ்த்தும் இந்தக்
கை வரும் தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப்
பை வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும் போது உன் அடைக்கலமே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-84)
"மை போன்ற நீல நிற கண்டத்தை (கழுத்தை) உடையவனின் (சிவனின்) மைந்தனான கந்தா என்று வாழ்த்தும் இந்த பழகிவந்த பழக்கமான இந்த தொண்டு விட்டு, வேறு எதையும் நான் அறியவில்லை; கற்ற கல்வியும் என்னைவிட்டுப் போய், துன்பப்படும் சுற்றமும், ஊரும் கதறி அழ, நான் பழகி வைத்திருக்கும் ஐம்புலன்களும் என்னைக் கைவிட்டுச் செல்ல, மெய் என்னும் இந்த உடல் உயிரை விடும்போது, உன்னை வந்து அடைக்கலம் ஆவேன்!"

மைவருங் கண்டத் தர்மைந்த கந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்றகல்வியும் போய்ப்
பைவருங் கேளும்பதியுங் கதறப் பழகிநிற்கு
மைவருங் கைவிட்டு மெய்விடும்போ துன்னடைக்கலமே.
கந்தரலங்காரம்-84


No comments:

Post a Comment