கந்தரலங்காரம்-85
காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுத மிக எளிதே விழி நாசி வைத்து
மூட்டிக் கபால மூலாதார நேர் அண்ட மூச்சை உள்ளே
ஓட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-85)
"காட்டில் வாழும் குறத்தியான வள்ளியின் கணவனான முருகனின் பாதங்களில் கருத்தை (உள்ளத்தை) செலுத்தினால், வீடு என்னும் முக்தி வீட்டை அடைவது மிக எளிது; அவ்வாறின்றி, கண் பார்வையை நாசி என்னும் நுனி மூக்கில் வைத்து, கபாலம் என்னும் மண்டைக்குள் மூலாதாரத்துக்கு மூச்சை ஓடவிட்டு, பின்னர் பிடித்து, அதை எங்கும் ஓடாமல் செய்யும் கலையை சாதிப்பவர்களே யோகிகள் ஆவார்."
காட்டிற் குறத்திபிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதமிக வெளிதேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமூலாதார நேரண்ட மூச்சையுள்ளே
யோட்டிப் பிடிதெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
(கந்தரலங்காரம்-85)
No comments:
Post a Comment