கந்தரலங்காரம்-86
வேலாயுதன் சங்கு
சக்ராயுதன் விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த
கந்தசுவாமி சுடர்க்குடுமிக்
காலாயுதக் கொடியோன்
அருள் ஆய கவசம் உண்டு என்
பால் ஆயுதம் வருமோ
யமனோடு பகைக்கினுமே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-86)
"வேலாயுதத்தை
உடைய கந்தனனே! சங்கு, சக்கர ஆயுதத்தை உடைய
திருமால், விரிஞ்சன் என்னும் வேதத்தை விரித்துக் காட்டிய
பிரம்மன் இவர்கள் அறிய முடியாத, சூலாயுதத்தை உடைய சிவன் தந்த
குமாரனான கந்தசுவாமியே! உன் சுடர்விடும் குடுமியும், காலாயுதம்
என்னும் சேவல் கொடியோன் அருள் பெற்ற கவசமும் என்னிடம் உண்டு; எனவே, யமனிடம் பகைத்துக் கொண்டாலும், அவன் ஆயுதம் என்னிடம் நெருங்காது."
வேலாயுதன்
சங்குசக்ராயுதன் விரிஞ்சன்னறியாச்
சூலாயுதன்
றந்தகந்தசுவாமி சுடர்க்குடுமிக்
காலாயுதக்
கொடியோனருளா யகவசமுண்டென்
பாலாயுத்ம் வருமோ
யமனோடு பகைக்கினுமே.
(கந்தரலங்காரம்-86)
No comments:
Post a Comment