கந்தரலங்காரம்-87
குமரா சரணம் சரணம் என் று அண்டர் குழாம் துதிக்கும்
அமராவதியில் பெருமாள்
திருமுகம் ஆறும் கண்ட
தமராகி வைகும் தனியான
ஞான தபோதனர்க்கு இங்கு
எமராசன் விட்ட கடை
ஏடு வந்து இனி என் செய்யுமே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-87)
"குமரா சரணம்
சரணம் என துதிக்கும் அண்டர் என்னும் தேவர்கள் கூட்டம், அமராவதியில் (தேவர்கள் உலகின் தலைநகரில்) எழுந்தருளிய
பெருமாளே! உன் திருமுகங்களான ஆறு முகங்களையும் கண்டு, அதனால்
பக்தியில் வாழ்ந்து ஞானம் கிடைக்கப் பெற்று, தவப் பேரை
அடைந்தர்களுக்கு, இங்கு, எமன் விட்ட
கடைசிகால ஒலை வந்து இனி என்ன செய்துவிட முடியும்?"
குமராசரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கு
ம்மராவதியிற்
பெருமாடிரு முகமாறுங்கண்ட
தமராகிவைகுந் தனியான
ஞானதபோதனர்க்கிங்
கெமராசன்விட்ட
கடையேடு வந்தினியென் செய்யுமே.
(கந்தரலங்காரம்-87)
No comments:
Post a Comment