கந்தரலங்காரம்-88
வணங்கித் துதிக்க
அறியா மனிதருடன் இணங்கிக்
குணம் கெட்ட துட்டனை
ஈடேற்றுவாய் கொடியும் கழுகும்
பிணங்கத் துணங்கை
அலகை கொண்டாடப் பிசிதர் தம் வாய்
நிணம் கக்க விக்ரம
வேலாயுதம் தொட்ட நிர்மலனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-88)
"உன்னை வணங்கித்
துதித்து போற்றத் தெரியாத மனிதர்களுடன் நான் சேர்ந்து, குணம் கெட்ட இந்தத் தீயவனை, நீ
காப்பாற்றி ஈடேற்றுவாய்! கொடி என்னும் காக்கைகளும், கழுகுகளும்
சண்டையிட, அலகை என்னும் பேய்கள் துணங்கை என்னும் கூத்தைக்
குதித்துக் கொண்டாடவும், பிசிதர் என்னும் அரக்கர்கள் தம்
வாய் வழியாக நிணம் என்னும் மாமிசக் கொழுப்பை வழியவிடவும், இருக்கும்
நிலையில், வீரமிக்க வேலாயுதத்தை அவர்கள் மீது விட்டு என்னை
அருள்செய்து காப்பாற்றுவாய் நிர்மலனே!"
வணங்கித்
துதிக்கவறியா மனிதருடனிணங்கிக்
குணங்கெட்ட
துட்டனையீடேற்றுவாய் கொடியுங்கழுகும்
பிணங்கத் துணங்கையலகை
கொண்டாடப் பிசிதர்தம்வாய்
நிணங்கக்க விக்ரம
வேலாயுதந் தொட்ட நிர்மலனே.
(கந்தரலங்காரம்-88)
No comments:
Post a Comment