கந்தரலங்காரம்-89
பங்கேருகன் எனைப்
பட்டு ஓலையில் இடப் பண்டு தளை
தம் காலில் இட்டது
அறிந்ததிலேனோ தனி வேலெடுத்துப்
பொங்கு ஓதம்
வாய்விடப் பொன் அம்பு சிலம்பு புலம்ப வரும்
எங்கோன் அறியின் இனி
நான்முகனுக்கு இருவிலங்கே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-89)
"பங்கேருகன் ஆன
(பங்கயம் என்னும் தாமரையில் வாழும்) பிரம்மனே, நீ,
என் தலையெழுத்தைப் பட்டு ஓலையில் எழுத நினைக்கிறாயா? கந்தா, நீ, பிரம்மனை, அவன் காலில் விலங்கு பூட்டி வைத்ததை அறிவேன்! தனிப் பெருமைவாய்ந்த வேலை
எடுத்துப் பொங்கும் ஓதம் என்னும் பெருங்கடல் வாய்விட்டு அழும்படி, பொன் உருவான மலையைச் சுழற்றி அடிக்கவும் வரும் என் கோன் என்னும் என்
முருகனுக்கு இது தெரிந்தால் (என் விதியை, ஏட்டில் எழுதும்
பிரம்மனின் செயல் தெரிந்தால்), இனிமேல் நான்முகன் என்னும்
பிரம்மனுக்கு மறுபடியும் விலங்குதான்!"
பங்கேரு கனெனைப்
பட்டோலையிடப் பண்டுதளை
தங்காலி லிட்டதறிந் திலேனோ
தனிவேலெடுத்துப்
பொங்கோதம் வாய்விடப்
பொன்னஞ்சிலம்பு புலம்பவரு
மெங்கோனறி யினினிநான்
முகனுக் கிருவிலங்கே.
(கந்தரலங்காரம்-89)
No comments:
Post a Comment