Saturday, March 5, 2016

கந்தரலங்காரம்-90


கந்தரலங்காரம்-90

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேல் ஆர் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-90)
"மாலோன் என்னும் திருமாலின் மருமகனே! மன்றாடி என்னும் மன்றத்தில் நடனமாடிய சிவனின் மைந்தனே! வானவர்களாகிய தேவர்களுக்கு மேலான தேவனே! மெய்ஞ்ஞானம் என்னும் உண்மை அறிவின் வடிவான தெய்வத்தை இந்த உலகில், சேல் என்னும் மீன்கள் நிறைந்த வயல்களும், பொழில் என்னும் சோலைகளும் சூழ்ந்த, திருச்செங்கோட்டில் வாழும் செங்கோடன் என்னும் முருகனை சென்று, கண்டு, தொழுது வணங்க, நீ, எனக்கு, நாலாயிரம் கண்கள் படைக்கவில்லையே நான்முகன் என்னும் பிரம்மனே!"

மாலோன் மருகனை மன்றாடிமைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார்வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங் கண்படைத்திலனேயந் தநான்முகனே.
(கந்தரலங்காரம்-90)


No comments:

Post a Comment