கந்தரலங்காரம்-91
கருமான் மருகனைச்
செம்மான் மகளைக் களவுகொண்டு
வரும் ஆகுலவனைச்
சேவல் கைக்கோளனை வானம் உய்யப்
பொரும் மாவினைச்
செற்ற போர் வேலனைக் கன்னிப் பூகம் உடன்
தருமா மருவு
செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-91)
"கரிய நிற
திருமாலின் மருமகனை, செம்மான் போன்ற மகளான வள்ளியைக்
களவுத் திருமணம் செய்து கொண்ட ஆகுலனை, சேவல் கொடியை கையில்
வைத்திருப்பவனை, வானவர்கள் என்னும் தேவர்களை பிழைக்க
வைப்பதற்காக, மாமரம் போன்று பெரிய உருவில் நின்ற சூரனை
வீழ்த்திய, போர் வேலவனே! கன்னி பூகம் என்னும் இளம் பாக்கு
மரங்களுடன், மா மரங்களும் செழித்து வளர்ந்த
திருச்செங்கோட்டில் வாழும் செங்கோடன் என்னும் முருகனே! உன்னை வாழ்த்துவது மிக
நன்றே!"
கருமான் மருகனைச்
செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச்
சேவற்க்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச்செற்ற
போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
றருமா மருவுசெங்
கோடனை வாழ்த்துகை சாலநன்றே.
(கந்தரலங்காரம்-91).
No comments:
Post a Comment