Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-92


கந்தரலங்காரம்-92

தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டு இருக்கும் சுத்த ஞானமெனும்
தண்டை அம் புண்டரிகம் தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டு பண்டு அண்டர் அண்டம் கொண்டு மண்டி மிண்டக்
கண்டு உருண்டு அன்டர் விண்டு ஓடாமல் வேல் தொட்ட காவலனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-92)
"உன் தொண்டர்கள் கண்டு, நெருங்கி, மொண்டு, உண்டு இருக்கும் சுத்த ஞானம் என்னும் தண்டை அணிந்த, புண்டரீகம் என்னும் தாமரை மலர் போன்ற, உன் திருவடிகளை தருவாய்! வேகமான தண்டாயுதத்தை கொண்டவனாகிய சூரன் இந்த மண்டலத்தை கைக்கொண்டு தேவர் உலகையும் நெருங்க, தேவர்கள் அச்சத்தினால், விழுந்து உருண்டு ஓட, அதைத் தடுத்து, தம் உலகை விட்டு அவர்கள் ஓடிவிடாதபடி, வேலாயுதத்தை விட்டு தடுத்த காவலனே!"

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டன்டர்விண் டோடாமல் வேறொட்ட காவலனே.
(கந்தரலங்காரம்-92)


No comments:

Post a Comment