கந்தரலங்காரம்-83
தேங்கிய அண்டத்து
இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல்கட்டும்
பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப
முறிந்தது சூரன் தளம் தனிவேல்
வாங்கி அனுப்பிடக்
குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-83)
"தேக்கி
சிறையில் அடைத்திருக்கும் அண்டத்து இமையோர்களான தேவர்களை சிறையிலிருந்து
மீட்பதற்கு, உனது சிற்றடியான பாதங்களுக்கு
பூங்கழல்களை கட்டிக் கொண்ட முருகப்பெருமானே! நீ, கூட்டமாகக்
குதிரைகள் தாங்கி வந்ததால், சூரனின் சேனை முறிந்தது; தனியான வேலாயுதத்தை வாங்கி எடுத்து எறிய, அதுகண்ட
எட்டு குன்றங்கள் என்னும் எட்டு மலைகளும் அந்த வேலுக்கு வழிவிட்டு விலகி
நின்றனவே!"
தேங்கிய
வண்டத்திமையோர் சிறைவி்டச் சிற்றடிக்கே
பூங்கழல்கட்டும்
பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப
முறிந்தது சூரன்றளந்தனிவேல்
வாங்கியனுப்பிடக்
குன்றங்களெட்டும் வழிவிட்டவே.
(கந்தரலங்காரம்-83).
No comments:
Post a Comment