Saturday, March 5, 2016

கந்தரலங்காரம்-82


கந்தரலங்காரம்-82

தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள் இணைக்கே
புகட்டிப் பணியப் பணித்து அருளாய் புண்டரீகன் அண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ரலோகத்தை முட்டவெட்டிப்
பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூரபயங்கரனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-82)
"தகடுபோன்ற சிவந்த கடம்ப மலர் மாலையும், என் நெஞ்சையும், உனது பாதங்களில் இணைத்து சேர்த்து பணிந்து வணங்குமாறு கட்டளையிட்டு அருள்புரிவாய்! புண்டரீகன் என்னும் தாமரையில் வீற்றிருப்பவன் அண்டத்தின் உச்சியையே பிளந்து மிக உயரத்தில் வளர்ந்து இந்திர லோகத்தையே முட்டும்படி நின்று, பகடு என்னும் ஆண் யானை போல் போரிட்ட நிட்டூரன் என்னும் சூரனையே மிரட்டிய பயங்கரனே!"

தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தருளாய் புண்டரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந் திந்த்ரலோகத்தை முட்டவெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூரபயங்கரனே.
(கந்தரலங்காரம்-82)


No comments:

Post a Comment