Saturday, March 5, 2016

கந்தரலங்காரம்-81


கந்தரலங்காரம்-81

தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
ஆராது உமை முலைப் பாலுண்ட பாலன் அரையில் கட்டும்
சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே
வாராது அகல் அந்தகா வந்தபோது உயிர் வாங்குவனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-81)
"தாரா என்னும் கார்த்திகை நட்சத்திரங்களான தாய்மார்கள் ஆறுபேர் தரும் முலைப்பால் போதாமல் உன் தாயான உமாதேவியின் முலைப் பாலும் உண்ட பாலகா! உன் இடுப்பில் கட்டும் சீரா என்னும் உடைவாளும், உன் கையில் வைத்திருக்கும் வேலும், என் சிந்தையில் எப்போது இருக்கிறது; எனவே, அந்தகா என்னும் எமனே என்னிடம் வராதே, அகன்று சென்றுவிடு! மீறி வந்தால், உன் உயிரை வாங்குவேன்!"

தாராகணமெனுந் தாய்மாரறுவர் தருமுலைப்பா
லாராதுமை முலைப்பாலுண்ட பாலனரையிற் கட்டுஞ்
சீராவுங் கையிற்சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்தபோதுயிர் வாங்குவனே.
(கந்தரலங்காரம்-81)


No comments:

Post a Comment