Saturday, March 5, 2016

கந்தரலங்காரம்-80


கந்தரலங்காரம்-80

மாகத்தை முட்டி வரும் நெடுங்கூற்றன் வந்தால் என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் சுத்த நித்த முத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுர அந்தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-80)
"விண்ணை முட்டி வரும் நெடுங்கூற்றன் என்னும் எமன் வந்தால், எனக்கு முன்பாக, தோகையை விரித்து குதிரை போன்று வேகத்தில் மயிலில் தோன்றி நிற்பாய் முருகா! சுத்த, நித்த, முக்தி என்னும் பரிசுத்தமான, அழியாது என்று நிலைக்கிற, முக்தியை வழங்கும் தியாகத்தின் தன்மையை, திரிபுரம் என்னும் மூன்று புரங்களையும் எரித்த முக்கண்ணனான சிவனை தன் வலப்பக்கத்தில் வைத்துக்கொண்ட பரம கல்யாணியான (அனைத்துக் கல்யாண குணங்களும் பொருந்திய) உமாதேவியரின் பாலகனே!"

மாகத்தை முட்டி வருநெடுங்கூற்றன் வந்தா லென்முன்னே
தோகைப்புரவியிற் றோன்றிநிற்பாய் சுத்தநித்தமுத்தித்
த்யாகப்பொருப்பைத் த்ரிபுராந்தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில்வைக்கும் பரமகல்யாணி தன் பாலகனே.
(கந்தரலங்காரம்-80)


No comments:

Post a Comment