கந்தரலங்காரம்-79
பந்தாடு மங்கையர்
செங்கயல் பார்வையில் பட்டு உழலும்
சிந்தா குலந்தனைத்
தீர்த்து அருள்வாய் செய்யவேல் முருகா
கொந்தார் கடம்பு
புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்கும்
கந்தா இளங்குமாரா
அமராவதி காவலனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-79)
"பந்துவிளையாடும்
மங்கையர்களின் சிவந்த கயல் என்னும் மீனைப் போன்ற பார்வையில் பட்டு உழலும் எனக்கு, சிந்தையின் குழப்பத்தை தீர்த்து அருள்புரிவாய்
செம்மையான வேலாயுதத்தை தாங்கிய முருகா! கொத்துக் கொத்தாக கடம்ப மலர்கள் நிறைந்த
கடம்ப மரங்கள் சூழ்ந்துள்ள திருத்தணி மலைக் குன்றில் நிற்கும் கந்தா! இளம் குமாரா!
தேவர்கள் வசிக்கும் அமராவதி என்னும் தலைநகரைக் கொண்டவனே!"
பந்தாடுமங்கையர்
செங்கயற் பார்வையிற்பட்டுழலுஞ்
சிந்தாகுலந்தனைத்
தீர்த்தருள்வாய் செய்யவேன் முருகா
கொந்தார் கடம்பு
புடைசூழ்திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா விளங்குமாரா
வமராவதி காவலனே.
(கந்தரலங்காரம்-79)
No comments:
Post a Comment