ட
கந்தரலங்காரம்-78
கூர்கொண்ட வேலனைப்
போற்றாமல் ஏற்றங் கொண்டாடுவிர்காள்
போர் கொண்ட காலன்
உமைக் கொண்டு போமன்று பூண்பனவும்
தார் கொண்டமாதரும்
மாளிகையும் பணச் சாளிகையும்
மார் கொண்டு போவர்
ஐயோ கெடுவீர் நும் அறிவின்மையே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-78)
"கூரான
வேலாயுதத்தைக் கொண்ட வேலனைப் போற்றாமல், ஏற்றம்
கொண்டாடுவீர்களானால், போர்கொண்ட காலன் என்னும் எமன் உங்களை
கொண்டுபோகும் அந்த நாளில், நீங்கள் பூண்டுள்ளவைகளையும்
(அணிந்துள்ள ஆபரணங்களையும்), தார் என்னும் பூமாலை அணிந்த உங்களின்
பெண்களையும், பணப் பெட்டியையும், யாராவது
கொண்டு போய்விடுவார்கள்! ஐயோ! நீங்கள்
கெடுவீர்கள், உங்களின் அறிவின்மையாலேயே!"
கூர்கொண்ட வேலனைப்
போற்றாமலேற்றங் கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட காலனுமைக்
கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்டமாதரு
மாளிகையும் பணச்சாளிகையு
மார்கொண்டு போவரையோ
கெடுவீர் நும்மறிவின்மையே.
கந்தரலங்காரம்-78
No comments:
Post a Comment