Saturday, March 5, 2016

கந்தரலங்காரம்-77


கந்தரலங்காரம்-77

சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி
மால் வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளிமலை எனவே
கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டு
நூல் வாங்கிடாது அன்று வேல் வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே."

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-77)
"சேல் என்னும் மீனின் கண்களைப் போன்ற கண்ணியர்களின் வண்ணப் பயோதரம் என்னும் தனங்களைச் சேர எண்ணிக் கொண்டு, மயங்காமல், ஏங்காமல், வெள்ளிமலை போலவே கால் வைத்து நிற்கும் களிறு என்னும் யானை உடைய (ஐராவதம் என்னும் யானையை உடைய) இந்திரனின் மனைவி இந்திராணியின் கழுத்தில் கட்டும் நூலை (மங்கலநாணை) அரக்கர்கள் அறுத்துவிடாமல் இருக்க, அவர்கள் மீது வேல் ஆயுதத்தை ஏவிய, பூங்கழல் என்னும் மலர் போன்ற திருவடிகளை உடையவனை நோக்கிப் பார் நெஞ்சே!"

சேல்வாங்கு கண்ணியர் வண்ணப்பயோதரஞ் சேரவெண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளிமலை யெனவே
கால்வாங்கி நிற்குங்களிற்றான் கிழத்திகழுத்திற்கட்டு
நூல்வாங்கிடாதென்று வேல்வாங்கி பூங்கழனோக்கு நெஞ்சே.

(கந்தரங்காரம்-77)

No comments:

Post a Comment