கந்தரலங்காரம்-76
கோடாத வேதனுக்கு யான்
செய்த குற்றம் என் குன்று எறிந்த
தாடாளனே தென் தணிகைக்
குமார நின் தண்டை அந் தாள்
சூடாத சென்னியும்
நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தனனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-76)
"கோணாத
வேதனுக்கு (பிரம்மனுக்கு) நான் செய்த குற்றம் என்ன! குன்று என்னும் மலையை பிளவு பட
எறிந்த தாடாளனே! தெற்கே உள்ள தணிகை மலையில் எழுந்தருளிய குமாரா! உன் தண்டை அணிந்த
அந்த பாதங்களும், அதைச் சூடிக் கொள்ளாத சென்னி
என்னும் தலையும், உன்னை நாடிச் செல்லாத கண்களும், உன்னைத் தொழாத கைகளும், உன்னைப் பாடாத வாயும்,
இவைகளை அந்தப் பிரம்மன், எனக்கு என்று
தெரிந்தே படைத்தானா என்று தெரியவில்லையே!"
கோடாதவேதனுக்கியான் செய்தகுற்றமென்குன்றெறிந்த
தாடாளனே
தென்றணிகைக்குமாரநின் றண்டையந்தாள்
சூடாதசென்னியு
நாடாதகண்ணுந் தொழாதகையும்
பாடாதநாவுமெனக்கே
தெரிந்து படைத்தனனே.
(கந்தரலங்காரம்-76)
No comments:
Post a Comment