கந்தரலங்காரம்-75
படிக்கின்றிலை பழனித்
திருநாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை
முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிகின்றிலை பரமானந்த
மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை
நெஞ்சமே தஞ்சமேது நமக்கு இனியே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-75)
"பழனி ஆண்டவன்
திருநாமத்தை படிக்கின்றேன் இல்லை! அவ்வாறு அவன் திருநாமத்தை படிக்கின்றவர்களின்
திருவடிகளை ஏற்றுக் கொள்கிறேன் இல்லை! முருகா என்று அழைக்கிறேன் இல்லை! பசித்து
இருப்பவர்களுக்கு உணவு இடுகிறேன் இல்லை! பரம ஆனந்தம் ஏற்பட, விம்மி விம்மி பக்தியில் திளைக்கிறேன் இல்லை! நெஞ்சமே! இனி நமக்கு யார்
தஞ்சாமாவர்கள் நெஞ்சே!
படிக்கின்
றிலைபழனித்திருநாமம் படிப்பவர்தாண்
முடிக்கின்
றிலைமுருகா வென்கிலை முசியாமலிட்டு
மிடிகின்
றிலைபரமானந்தமேற் கொளவிம்மிவிம்மி
நடிக்கின்
றிலையெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே.
(கந்தரலங்காரம்-75)
No comments:
Post a Comment