கந்தரலங்காரம்-74
அராப்புனை வேணியன்
சேயருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டை
அந்தாள் தொழல் வேண்டும் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும்
மனமும் பதைப்புஅறல் வேண்டும் என்றால்
இராப் பகல் அற்ற
இடத்தே இருக்கை எளிதல்லவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-74)
"பாம்பை புனைந்த
வேணியனான சிவனின் மைந்தனின் அருள் வேண்டும்! அவிழ்ந்த (மலர்ந்து அவிழ்ந்த) அன்பால்
குரா என்னும் மலரின் தண்டையும் அணிந்துள்ள அவன் திருவடிகளை தொழல் வேண்டும்! கொடிய
ஐவர்களின் (ஐம்புலன்களின்) பராக்கறல் என்னும் அட்டகாசம் ஒழிய வேண்டும்! மன
ஓட்டமும், பதைபதைப்பும் நீங்க வேண்டும்!
இவைகள் அகல வேண்டும் என்றால், இரவு பகல் இல்லாத இடத்தில்
இருக்க வேண்டும்! அப்படி இருப்பது எளிதானது அல்லவே!"
அராப்புனை வேணியன்
சேயருள் வேண்டுமவிழ்ந்தவன்பாற்
குராப்புனை
தண்டையந்தாடொழல் வேண்டுங் கொடியவைவர்
பராக்கறல்
வேண்டுமெனமும் பதைப்பறல் வேண்டுமென்றா
லிராப்பகலற்றவிடத்
தேயிருக்கை யெளிதல்லவே.
(கந்தரலங்காரம்-74)
No comments:
Post a Comment