கந்தரலங்காரம்-73
போக்கும் வரவும்
இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும்
முடிவும் இல்லாத ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்
தானே தரும் எனைத் தன்வசத்தே
ஆக்கும் அறுமுகவா
சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-73)
"போவதும், வருவதும், இரவும், பகலும், புறத்திலும், உள்ளேயும்,
வாக்கிலும், உருவத்திலும், இறுதியும் இல்லாத ஒன்று திரும்பத் திரும்ப வந்து வந்து, தாக்கி, என் மனோலத்தை தானே தந்து அருள் செய்து,
உன் மயமாக்கும் ஆறுமுகம் கொண்டவனே! இந்த மனோலயப் பேரின்பத்தைப்
பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை!"
போக்கும் வரவுமிரவும்
பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும்வடிவு
முடிவுமில்லா தொன்றுவந்துவந்து
தாக்குமனோலயத்தானே
தருமெனைத் தன்வசத்தே
யாக்குமறுமுகவா
சொல்லொணாதிந்த வானந்தமே.
(கந்தரலங்காரம்-73)
No comments:
Post a Comment