கந்தரலங்காரம்-72
சேந்தனைக் கந்தனைச்
செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்
நூல்விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக்
கந்தக்கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாம் துணைப் போது
மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே.
(அருணகிநாதர் அருளிய
கந்தரலங்காரம் பாடல்-72)
"சேந்தனை, கந்தனை, செங்கோட்டு என்னும்
திருச்செங்கோட்டில் எழுந்தருளி உள்ள வெற்பனை, செந்தமிழ்
நூல்கள் விரித்து வளரும்படி செய்தோனை, எங்கும் விளங்குகிற
வள்ளியின் காந்தனை, கந்தக் கடம்பனை, கார்
மயில் வாகனனை, சார்ந்து உயிர் உள்ளவரை துணையாக மறக்காமல்
வைத்துக் கொண்டால், ஒரு தாழ்வும் நமக்கு இல்லையே!"
சேந்தனைக் கந்தனைச்
செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்
நூல்விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக்
கந்தக்கடம்பனைக் கார்மயில்வாகனனைச்
சாந்துணைப்போது
மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே.
(கந்தரலங்காரம்-72)
No comments:
Post a Comment