கந்தரலங்காரம்-71
துருத்தி எனும்படி
கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து
அருத்தி உடம்பை
ஒறுக்கி என்னாஞ் சிவயோகம் எனும்
குருத்தை அறிந்து
முகம் ஆறுடைக் குருநாதன் சொன்ன
கருத்தை மனத்தில்
இருத்தும் கண்டீர் முத்தி கைகண்டதே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-71)
"துருத்தி
என்னும் தோல் நுரையீரலை கும்பகம் செய்து வாயு என்னும் காற்றை சுற்றவிட்டு, முறியச் செய்து, அதையே உணவாகக்
கொண்டு, உடம்பை ஒறுக்கி செய்யும் முறையின் பயன் என்ன?
சிவயோகம் என்னும் குருத்தை அறிந்து ஆறுமுகத்தை உடைய குருநாதன் சொன்ன
கருத்தை மனத்திலே இருத்தி வைத்து நடந்தால் முக்தி கைகூடுமே!"
துருத்தியெனும்படி
கும்பித்துவாயுவைச் சுற்றிமுறித்
தருத்தியுடம்பை
யொறுக்கி லென்னாஞ் சிவயோகமெனுங்
குருத்தையறிந்து
முகமாறுடைக் குருநாதன் சொன்ன
கருத்தைமன
த்திலிருத்துங் கண்டீர் முத்திகைகண்டதே.
(கந்தரலங்காரம்-71)
No comments:
Post a Comment