கந்தரலங்காரம்-70
விழிக்குத் துணை
திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை
முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன்
பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும்செங்கோடன்
மயூரமுமே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-60)
"விழி என்னும்
நம் கண்களுக்குத் துணையாக திருமுருகனின் மென்மையான மலர்ப்பாதங்கள்! மெய்ம்மை
என்னும் உண்மை குறையாத மொழிக்குத் துணை முருகா என்னும் அவனின் நாமங்கள்! நாம்
முன்பு செய்த பழி பாவங்களுக்குத் துணை அவனின் பன்னிரண்டு தோள்களே! நாம் போகும், பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும், செங்கோடன் என்னும் முருகனின் மயூரம் என்னும் மயிலுமே!"
விழிக்குத்துணை
திருமென்மலர்ப்பாதங் கண்மெய்ம்மைகுன்றா
மொழிக்குத்துணை
முருகாவெனு நாமங் கண்முன்புசெய்த
பழிக்குத்துணையவன்
பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை
வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
(கந்தரலங்காரம்-70)
No comments:
Post a Comment