கந்தரலங்காரம்-69
தந்தைக்கு முன்னம்
தனி ஞான வாளொன்று சாதித்து அருள்
கந்தச்சுவாமி எனைத்
தேற்றிய பின்னர்க் காலன் வெம்பி
வந்து இப்பொழுது
என்னை என் செயலாம் சத்திவாள் ஒன்றினாற்
சிந்தத் துணிப்பன்
தணிப்பு அரும் கோபத் திரி சூலத்தையே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-69)
"முன்னார்
ஒருநாளில், தந்தையான சிவனுக்கு தனி ஞான வாள்
ஒன்றைக் கொடுத்து அருள் உபதேசித்த கந்தசுவாமி கடவுளே! அந்த உபதேசத்தால் என்னையும்
தேற்றுவாய்! என்னை அவ்வாறு தேற்றி, காலன் கோபமாக வந்து
இப்போது என்ன செய்துவிட முடியும்? சத்திவேள் ஒன்றினால்,
அவ்வாறு என்னை சிந்தத் துடிப்பவனின் கோபத்தை, அருள்
கொண்ட திரி சூலத்தினால் அடக்குவேன்!"
தந்தைக்குமுன்னந்
தனிஞானவா ளொன்று சாதித்தருள்
கந்தச்சுவாமியெனைத்
தேற்றியபின்னர்க் காலன்வெம்பி
வந்திப்பொழுதென்னை
யென்செயலாஞ் சத்திவாளொன்றினாற்
சிந்தத்துணிப்பன்
றணிப்பருங்கோபத்ரி சூலத்தையே.
(கந்தரல்ங்காரம்-69)
No comments:
Post a Comment