கந்தரலங்காரம்-68
சாடும் சமரத் தனிவேல்
முருகன் சரணத்திலே
ஓடும் கருத்தை இருத்த
வல்லார்க்கு உகம்போய்ச் சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரி
கொண்டாடப் பசுபதி நின்று
ஆடும் பொழுது பரமாய்
இருக்கும் அதீதத்திலே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-68)
"சாடும் சமரத்
தனிவேல் முருகன் சரணத்திலே, ஓடும் கருத்தை என்னும் 'அலையும் மனதை'
நிறுத்தி, இருத்தி வைக்கும் வல்லவருக்கு உகம்
என்னும் எல்லா யுகங்களும் கடந்து, சகம் என்னும் எல்லா
உலகங்களும் கடந்து, பாடலுக்கு வல்லவளாகிய கவுரி என்னும் உமாதேவி
புகழ்ந்து கொண்டாடும், பசுபதி என்னும் சிவன் நின்று ஆடும்
பொழுது, பரம் என்னும் நிலையாய் இருக்கும் அதீதம் என்னும்
இறுதி நிலையிலே!"
சாடுஞ்சமரத் தனிவேன்
முருகன் சரணத்திலே
யோடுங்கருத்தையிருத்த
வல்லார்க்குகம்போய்ச் சகம்போய்ப்
பாடுங் கவுரி
பவுரிகொண்டாடப் பசுபதிநின்
றாடும் பொழுது
பரமாயிருக்குமதீதத்திலே.
(கந்தரலங்காரம்-68)
No comments:
Post a Comment