Friday, March 4, 2016

கந்தரலங்காரம்-67

கந்தரலங்காரம்-67

பெறுதற்கரிய பிறவியைப் பெற்று நின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன் மத கும்ப கம்பத்
தறுகட் சிறுகுகட் சங்க்ராம சைல சரச வல்லி
இறுகத் தழுவுங் கடகாசல பன்னிரு புயனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-67)
"பெறுவதற்கு அரிய இந்த மனிதப் பிறவியைப் பெற்று, உன் சிறிய காலடியை குறுகிப் பணிந்து வணங்கி முக்தி பெற நான் கற்றிருக்கவில்லை; மத கும்ப கம்பத்தைத் உடைய, அசையும் சிறிய கண்களை உடைய யானையில் இருக்கும் சங்க்ராம! மலையில் சரச வல்லியை இறுகத் தழுவும் கடகாசலம் என்னும் மலைபோல விளங்கும், பன்னிரண்டு புயங்களை (தோள்களை) உடையவனே!"

பெறுதற்கரிய பிறவியைப் பெற்று நின்சிற்றடியைக்
குறுகிப்பணிந்து பெறக்கற்றிலேன் மதகும்பகம்பத்
தறுகட்சிறு குகட்சங்க்ராம சைலசரசவல்லி
யிறுகத் தழுவுங் கடகாசல பன்னிருபுயனே.
(கந்தரலங்காரம்-67)


No comments:

Post a Comment