கந்தரலங்காரம்-66
நீர்க் குமிழிக்கு
நிகர் என்பர் யாக்கை நில்லாது செல்வம்
பார்க்கும் இடத்து
அந்த மின் போலும் என்பர் பசித்து வந்தே
ஏற்கும் அவர்க்கிட
என்னின் எங்கேனும் எழுந்திருப்பார்
வேல் குமரற்கு
அன்பில்லாதவர் ஞானம் மிகவும் நன்றே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-66)
"நீர்க்
குமிழிக்கு நிகரானது என்பார்கள் இந்த உடம்பை! நாம் வைத்திருக்கும் செல்வம்
நிற்காது; இன்னும் பார்த்துச் சொன்னால்,
அந்த செல்வமானது மின்னலைப் போல வேகத்தில் நிற்காமல் செல்லும்
தன்மையது; பசித்து வந்து யாசித்து நிற்பவருக்கு உணவளிக்காமல்
எங்கேயாவது எழுந்து போய் விடுவர்; வேலாயுதத்தை உடைய
குமரனுக்கு, இந்த அன்பில்லாதவரின் ஞானம் மிகவும்
நன்றே!"
நீர்க்குமிழிக்கு
நிகரென்பர் யாக்கை நில்லாது செல்வம்
பார்க்குமிடத்தந்தமின்
போலுமென்பர் பசித்துவந்தே
யேற்குமவர்க்கிட
வென்னினெங்கேனு மெழுந்திருப்பார்
வேற்குமரற்
கன்பில்லாதவர் ஞான மிகவுநன்றே.
(கந்தரலங்காரம்-66)
No comments:
Post a Comment