Friday, March 4, 2016

கந்தரலங்காரம்-65

கந்தரலங்காரம்-65

வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடும் கயிற்றால்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கர அசலங்கள்
எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-65)
"வெட்டுகிற எருமைக்கடா மீது தோன்றும் வெங்கூற்றன் என்னும் எமன் விடும் கயிற்றால் கட்டும்போது, என்னை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்; கரங்களை விரித்து, எட்டு மலைகளையும் தாண்டி, விட்டு ஓட எட்டாத வெளி எல்லாபகுதிகளும் புதைய மறையும்படி, விரிக்கும் தோகையை உடைய மயிலை வாகனமாக உடையவனே!"

வெட்டுங்கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங்கயிற்றாற்
கட்டும்பொழுது விடுவிக்க வேண்டுங்கராசலங்க
ளெட்டுங் குலகிரியெட்டும் விட்டோட வெட்டாதவெளி
மட்டும் புதையவிரிக்குங் கலாபமயூரத்தனே.
(கந்தரலங்காரம்-65)


No comments:

Post a Comment