கந்தரலங்காரம்-94
தெள்ளிய ஏனலில்
கிள்ளையைக் கள்ளச் சிறுமி எனும்
வள்ளியை வேட்டவன்
தாள் வேட்டிலை சிறுவள்ளை தள்ளித்
துள்ளிய கெண்டையைத்
தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல
வெள்ளிய நித்தில
வித்தார மூரலை வேட்டநெஞ்சே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-94)
"தெளிவான ஏனல்
என்னும் தினை வயலில் உள்ள கிளியைப் போன்ற, கள்ளச் சிறுமியான
(உள்ளத்தைக் கவரும் சிறுமியான) வள்ளியை விரும்பியவனான, முருகனின்
பாதங்களை நீ தேடவில்லை!, ஆனால், உன்
மனமானது, நீரில் உள்ள சிறிய வள்ளை கொடியை தள்ளிவிட்டு,
விளையாடி, அதில் துள்ளித் திரியும் கெண்டை
மீனைப் போன்ற தொண்டையையும், தோதகமான (ஆசையான) சொல்லையும்,
நல்ல வெள்ளி போன்ற முத்துப் பற்களையும், வித்தாரமாக
(எங்கும் நிறைந்த) புன்னகையையும், கொண்ட பெண்களை
விரும்புகிறாயே நெஞ்சே!"
தெள்ளிய வேனலிற்
கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன்
றாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத்
தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல
வெள்ளிய நித்தில
வித்தார மூரலை வேட்டநெஞ்சே.
(கந்தரலங்காரம்-94)
No comments:
Post a Comment