Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-95


கந்தரலங்காரம்-95

யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டல் அன்றி யாவருக்கும்
தோன்றாது சத்தியம் தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினால்
சான்றாரும்  அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பதே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-95)
"நான், தான் என்னும் இரண்டு அகங்காரச் சொற்களும் இல்லாமல் கெட்டால் அன்றி, அனைவருக்கும் சத்தியம் தோன்றாது; தொல்லை என்னும் பழமை வாய்ந்த இந்த பெரிய நிலமான பூமியை, சூகரம் என்னும் வராக அவதாரம் எடுத்துப் பிளந்தவரான, திருமாலின் மருமகனே, முருகனே! கருணையானவனே! கேள்வியினால், சான்றோர் யாரும் அறியாத, தனி வெளியான ஞான வெளியில், உன் திருவருள் வந்து (முக்தி நிலையில்) சந்திக்கிறதே!

யான்றா னெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.
(கந்தரலங்காரம்-95)


No comments:

Post a Comment