Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-96


கந்தரலங்காரம்-96

தடம் கொற்ற வேள் மயிலே இடர் தீரத் தனிவீடில் நீ
வடக்கில் கிரிக்கப் புறத்து நின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கு அப்புறத்தும் கதிர்க்கு அப்புறத்தும் கனகசக்ரத்
திடர்க்கு அப்புறத்தும் திசைக்கு அப்புறத்துந் திரிகுவையே.

(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் பாடல்-96)
"வெற்றி உடைய வேல் மயிலே! உன்னை, இந்த உலகின் துயர் தீர்ப்பதற்காக, தனியே விட்டால், நீ, வடக்கில் உள்ள மேரு மலைக்கு அப்பாலும் உனது தோகையினால் வட்டமிட்டு சுழன்று, கடலுக்கு அப்பாலும், கதிர் என்னும் சூரியனுக்கு அப்பாலும், கனகசக்ரம் என்னும் சக்ரவாள பொன்மலைக்கு அப்பாலும், எல்லாத் திசைகளுக்கும் அப்பாலும், நீ உலாவித் திரிவாய்!"

தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவீடினீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.

(கந்தரலங்காரம்-96)

No comments:

Post a Comment