கந்தரலங்காரம்-97
சேலில் திகழ் வயல்
செங்கோடை வெற்பன் செழும் கலபி
ஆலித்து அனந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து
காலில் கிடப்பன
மாணிக்க ராசியும் காசினியைப்
பாலிக்கும் மாயனும்
சக்ராயுதமும் பணிலமுமே.
(அருணகிரிநாதர் அருளிய
கந்தரலங்காரம் பாடல்-97)
“கெண்டை மீன்கள்
திரியும் வயல்வெளிகளைக் கொண்ட செங்கோடை என்னும் திருச்செங்கோட்டில் வாழும்
முருகனின் செழுமையான மயிலானது இனிய குரல் எழுப்பி, அனந்தன் என்னும் ஆதிசேசனின் பணா
என்னும் பாம்பின் மகுடத்தை தாக்குவதால், அதிர்ந்து அதிர்ந்து ஒலி உண்டாகி, அதனால்,
மணிமகுடத்தில் இருக்கும் மாணிக்கங்களும், காசினி என்னும் இந்த உலகைப் பாதுகாக்கும்
திருமாலின் கரத்தில் உள்ள சங்கும் சக்கரமும் உதிர்ந்து மயிலின் காலில்
கிடக்கின்றன.”
சேலிற் றிகழ்வயற்
செங்கோடை வெற்பன் செழுங்கலபி
யாலித் தனந்தன் பணாமுடி
தாக்க வதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன
மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ்
சக்ராயுதமும் பணிலமுமே.
(கந்தரலங்காரம்-97)
**
No comments:
Post a Comment