கந்தரலங்காரம்-98
கதிதனை ஒன்றையும்
காண்கின்றிலேன் கந்தவேல் முருகா
நதிதனை அன்ன பொய் வாழ்வில்
அன்பாய் நரம்பால் பொதிந்த
பொதிதனையும் கொண்டு
திண்டாடுமாறு எனைப் போதவிட்ட
விதிதனை நொந்து நொந்து
இங்கே என்றன் மனம் வேகின்றதே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-98)
“கதி மோட்சம் அடையும்
வழி ஒன்றையும் என்னால் காண முடியவில்லையே கந்தவேல் முருகா! நதி நீரைப் போல ஓடும்
இந்த பொய்யான வாழ்வில், அன்புடன், நரம்புகளால் பொதித்து வைக்கப்பட்ட இந்த
பொதிமூட்டை என்னும் உடலைச் சுமந்து கொண்டு, நான் திண்டாடுமாறு என்னை போகவிட்டு
விட்டாயே! இந்த விதியை நொந்து நொந்து இங்கே எனது மனம் வேகின்றதே!”
கதிதனை யொன்றையுங்
காண்கின்றி லேன்கந்த வேன்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன்
பாய்நரம்பாற் பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு
திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென்
றன்மனம் வேகின்றதே.
(கந்தரலங்காரம்-98)
**
No comments:
Post a Comment