கந்தரலங்காரம்-99
காவிக் கமலக் கழலுடன்
சேர்த்து எனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே
துணை ஏது மின்றித்
தாவிப் படரக் கொழு கொம்பு
இலாத் தனிக்கொடி போல்
பாவித் தனி மனம் தள்ளாடி
வாடிப் பதைக்கின்றதே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-99)
“சிவந்த கமலம்
என்னும் தாமரை மலரின் கழலுடன் கூடிய உன் திருவடியில் என்னைச் சேர்த்து காத்து
அருள்வாயாக! தூவி என்னும் இறகுகளுடன் கூடிய குலமயில் வாகனத்தில் செல்வபனே!
எனக்குத் துணை ஏதும் இல்லாமல், தாவிப் படருவதற்கு ஒரு கொழு கொம்புகூட இல்லாமல்,
தனியான கொடி போல, இந்தப் பாவியாகிய நான், தனியாக மனம் தள்ளாடி, வாடி
பதைபதைக்கின்றேன்!”
காவிக் கமலக் கழலுடன்
சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே
துணையேது மின்றித்
தாவிப் படரக்
கொழுகொம் பிலாத் தனிக்கொடிபோற்
பாவித் தனிமனந் தள்ளாடி
வாடிப் பதைக்கின்றதே.
(கந்தரலங்காரம்-99)
**
No comments:
Post a Comment