Sunday, March 6, 2016

கந்தரலங்காரம்-106


கந்தரலங்காரம்-106 (அதிகப்பாடல்-106)

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்து அருளா ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-106)
“இருபக்க நெருப்புள்ள கொள்ளிக் கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல, கலங்குகிற என் உள்ளத்தின் துயரத்தை நீக்கி அருள் புரிவாய் கந்தா! ஒரு கோடி முத்துக்கள் தெளித்துக் கொழிக்கும் கடலான செந்தில் என்னும் திருச்செந்தூரில் வாழும் சேவகனே! வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!”

கொள்ளித் தலையி லெறும்பது போலக் குலையுமென்ற
னுள்ளத்துயரை யொழித் தருளாயொரு கோடி முத்தந்
தெள்ளிக் கொழிக்குங் கடற் செந்தின் மேவிய சேவகனே
வள்ளிக் குவாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

**

No comments:

Post a Comment