குமாரசுவாமி
(குமரக்கடவுள்)
சிவபெருமானின்
நெற்றிக் கண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினிப் பொறிகளை, அக்கினி
பகவான் ஏற்றுக் கொண்டு, அதை எடுத்துப் போய், சரவணப் பொய்கை என்னும் குளத்தில் விட்டார்; அந்த
அக்கினிப் பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளாக உருமாறின. அவற்றை
ஆறு கார்த்திகை நட்சத்திரப் பெண்கள் பாலுட்டி வளர்த்தனர்; இதைப்
பார்த்த உமாதேவி, அந்த குழந்தைகளை ஆறையும் ஒருசேர எடுத்து
தழுவினார்; அந்த ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறி
விட்டன; ஆனாலும், அவை ஆறு முகங்களுடன்,
பன்னிரண்டு தோள்களுடன், இரு பாதங்களுடன்
ஆறுமுகப் பெருமான் ஆனார்;
இவரே தேவர்களுக்கு
தலைவன்;
இவரின் வாகனம் மயில்;
இவரின் ஆயுதம் வேல்;
இவரின் இரு மனைவிகள்
வள்ளியும், தெய்வானையும்.
இவர் சூரபர்மனை
எதிர்த்து போரிட்டு அழித்தார்;
No comments:
Post a Comment