கந்தரனுபூதி-3
வானோ புனல் பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே.
வானம் என்னும் ஆகாயமோ, புனல் என்னும் நீரோ,
பார் என்னும் பூமியோ, கனல் என்னும் நெருப்போ, மாருதம் என்னும் காற்றோ, ஞானோதயம்
என்னும் ஞானத்தில் அறியும் அறிவோ, நவிலும் நான்கு மறைகளோ, ‘நான்’ என்று சொல்லும்
இந்த உடலோ, அதில் இயங்கும் மனமோ, என்னை நீ ஆட்கொண்ட இடமோ, இவைகள் எல்லாம்தான் “பொருள்”
என்னும் “பரம்பொருள்” என்று சொல்கிறோமா சண்முகனே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
பாடல்-3)
**
No comments:
Post a Comment