கந்தரனுபூதி-4
வளைபட்ட கை மாதோடு மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத்தொடு வேலவனே.
வளையல் கையுடன் இருக்கும் மாதருடன், மக்கள்
என்னும் பிள்ளைச் செல்வங்களுடன், தளை என்னும் குடும்ப பாசத்தில் கட்டுப்பட்டு,
அழிந்து போவதுதான் வழியா! அது சரியா! கூட்டமாக எழுந்து வரும் சூரருடன் உரம்
என்னும் அவன் மார்பையும், கிரி என்னும் அவன் வாழும் மலையையும் துளைத்துச் செல்லும்
வேலை ஏவிய வேலவனே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
பாடல்-4)
**
No comments:
Post a Comment