Wednesday, March 9, 2016

கந்தரனுபூதி-5


கந்தரனுபூதி-5

மக மாயை களைந்திட வல்லபிரான்
முகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே
அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே.

இந்த உலக மாயையை நீக்கிவிடும் வல்லபிரானே! முகம் ஆறு கொண்ட ஆறுமுகன் சொன்னவற்றை சொல்லாமல் விட்டு விட்டேனே! அகம் என்னும் வீடு, ஆடை என்னும் அணிகலங்கள், மடந்தையர் என்னும் மாதர்கள் என்று எல்லோரும் இந்த உலக மாயை என்னும் பொய்யான வாழ்க்கையில் உழன்று இன்னும் நின்று தயங்கிக் கொண்டிருக்கிறேன்.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-5)

**

No comments:

Post a Comment